செய்திகள்

அரியாங்குப்பத்தில் திருநங்கை தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-07-05 10:12 GMT   |   Update On 2018-07-06 01:02 GMT
அரியாங்குப்பத்தில் காதலித்த வாலிபர் திருமணம் செய்ய மறுத்ததால் திருநங்கை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பம்:

புதுவை அரியாங்குப்பம் காக்கயந்தோப்பு 4-வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் கார்த்திக் என்ற ஆஷிகா (வயது25). திருநங்கையான இவர் துர்கா என்பவரின் பராமரிப்பில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் ஆஷிகா புதுவை ஆட்டுப்பட்டியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார். தொடக்கத்தில் அந்த வாலிபர் ஆஷிகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி வந்தார். நாளடைவில் அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஆஷிகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல் அரியாங்குப்பம் டோல்கேட் சேரன் வீதியை சேர்ந்தவர் குமாரவேலு (வயது54), தட்டுவண்டி தொழிலாளி. இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் ஒருமகனும், 2 மகள்களும் உள்ளனர். குமாரவேலுவுக்கு மதுபழக்கம் இருந்து வந்தது. இந்த பழக்கத்தினால் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு டாக்டர்கள் மதுகுடிக்க கூடாது என அறிவுறுத்தியும் குமாரவேலு தொடர்ந்து மதுகுடித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று குமாரவேலு மதுகுடித்துவிட்டு வீடு திரும்பியதும் திடீரென மயங்கி விழுந்து இறந்து போனார்.

இந்த 2 சம்பவங்கள் குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News