செய்திகள்

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் தெப்ப உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2018-06-21 22:17 IST   |   Update On 2018-06-21 22:17:00 IST
தமிழகத்தில் தலைசிறந்த வைணவ தலங்களில் ஒன்றாக மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் தெப்ப உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மன்னார்குடி:

தமிழகத்தில் தலைசிறந்த வைணவ தலங்களில் ஒன்றாக மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபாலனுக்கு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் திருவிழா நடைபெற்று வருகிறது. ஆனி மாதம் 10 நாட்கள் நடைபெறும் தெப்ப உற்சவம் சிறப்பு மிக்க திருவிழாவாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்ப உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இதையொட்டி பெருமாள் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கருட உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. இதை தொடர்ந்து ராஜகோபாலசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி வருகிற 27-ந் தேதி வரை தினமும் ராஜகோபாலசாமி பல்லக்கில் புறப்பட்டு வீதி உலா வந்து, பின்னர் அரித்திராநதி குளம் தென்கரையில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளுவார்.

அதைத்தொடர்ந்து சூர்யபிரபை, சே‌ஷவாகனம், கருட சேவை, அனுமந்த வாகனம், யானை வாகனம், சூர்னாபிஷேகம், வெண்ணெய்தாழி, குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. 28-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு அரித்திராநதி தெப்பகுளத்தில் ராஜகோபாலசாமி தெப்பஉற்சவம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News