செய்திகள்

ராமேசுவரம் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.70 லட்சம் தாண்டியது

Published On 2018-06-20 11:18 GMT   |   Update On 2018-06-20 11:18 GMT
ராமேசுவரம் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 70 லட்சத்திற்கும் மேலாக வருவாயாக கிடைத்தது.
ராமேசுவரம்:

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் ஆகிய சன்னதியில் முன்புள்ள உண்டியல்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நம்புகோவில் உள்பட உபகோவில்களில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டது.

பின்னர் பக்தர்களால் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட இந்த பணத்தை கோவில் கல்யாண மண்டபத்தில் கொண்டுவரப்பட்டது. அங்கு இணை ஆணையர் மங்கையர்க்கரசி,சிவகங்கை அறநிலைய்த்துறை அலுவலக இணை ஆணையர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது.

இதில் ரொக்கப்பணம் ரூ. 72 லட்சத்து 27 ஆயிரத்து 307 ரூபாயும், தங்கம் 135 கிராமும், வெள்ளி 4 கிலோ 150 கிராம் காணிக்கையாக கிடைத்தது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி கோட்ட பொறியாளர் மயில் வாகனன், கண்காணிப்பாளர் ககாரீன்ராஜ், பாலசுப்பிரமணியன், நேர்முக உதவியாளர் கமலநாதன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலை செல்வன், கண்ணன், செல்லம், அலுவலர்கள் பழனிமுருகன், முனியசாமி, சிவபுத்திரன்,ராமநாதன், சிவவடிவேல், தபேதார் முத்துக்குமார்,மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News