செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் 150 போலீசார் இடமாற்றம்

Published On 2018-06-02 21:20 IST   |   Update On 2018-06-02 21:20:00 IST
3 ஆண்டுகளாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 150 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, லால்குடி, தொட்டியம், திருவெறும்பூர், பாய்லர்ஆலை, துவாக்குடி, முசிறி உள்பட பல்வேறு இடங்களில் போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஏராளமான போலீசார் பணியாற்றி வருகிறார்கள். 3 ஆண்டுகளாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். 

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வந்த போலீசார் 80 பேரும், விருப்பத்தின்பேரில் இடமாற்றம் கேட்ட 12 பேரும், சிறு, சிறு தவறுகளுக்காக தண்டனை அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் என மொத்தம் 150 போலீசார் மாவட்டத்துக்குள்ளேயே வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் பிறப்பித்துள்ளார்.
Tags:    

Similar News