செய்திகள்

தேனி வங்கியில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கையாடல் - அதிகாரிகள் புகார்

Published On 2018-05-02 09:51 GMT   |   Update On 2018-05-02 09:51 GMT
தேனி வங்கியில் அடகு வைக்கப்பட்டு இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளனர்.
தேனி:

தேனி - மதுரை சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். நகையை திருப்பும் பொழுது நகை மாறியும் எடை குறைவாகவும் இருந்ததாக குறச்சாட்டு எழுந்தது. இது குறித்து வங்கி நிர்வாகத்திடம் வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். தொடர்ந்து இது போன்ற புகார்கள் வந்ததால் வங்கியில் அடகு வைக்கப்பட்டு இருந்த நகைகளை ஆய்வு செய்தனர்.

அப்போது வங்கியில் அடகு வைக்கப்பட்டு இருந்த பொதுமக்களின் ரூ.1 கோடி மதிப்பிலான நகை கையாடல் செய்யப்பட்டு இருப்பதும், வங்கி பெட்டகத்தில் இருந்த அடகு நகைகள் போலியானவை என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் வங்கி அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News