செய்திகள்

ஈரோடு ரங்கம்பாளையத்தில் ரெயில் மோதி மூதாட்டி பலி

Published On 2018-03-31 22:43 IST   |   Update On 2018-03-31 22:43:00 IST
ஈரோடு ரங்கம்பாளையத்தில் நடை பயிற்சி சென்ற மூதாட்டி ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு:

ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவரது மனைவி சரோஜினி (வயது70). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தினமும் காலையில் சரோஜினி நடைபயிற்சி மேற்கொள்வாராம்.

வழக்கம்போல இன்று காலையிலும் நடை பயிற்சிக்கு சென்றார். அப்போது ரங்கம்பாளையம் ரெயில்வே தண்டவாளத்தை சரோஜினி கடக்கும் போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Similar News