செய்திகள்

கல்லூரி படிப்பை பாதியில் முடித்த மாணவர் தற்கொலை

Published On 2018-03-30 18:50 IST   |   Update On 2018-03-30 18:50:00 IST
பெருந்துறையில் கல்லூரி படிப்பை பாதியில் முடித்த மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு:

திருப்பூர் வசந்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவரது மகன் மனோஜ்குமார் (வயது 21).

மனோஜ்குமார் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு படிப்பு சரியாக வராததால் அவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இதனால் மனோஜ்பிரபு திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அங்கும் அவர் சரியாக வேலைக்கு போக வில்லையாம்.

இந்த நிலையில் அவர் மாயமாகி விட்டார். அவரை அவரது தந்தையும் மற்றொரு மகனும் பல இடங்களில் தேடினர்.

இந்த நிலையில் பெருந்துறை வெள்ளோடு ரோட்டில் மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்ற மனோஜ்பிரபு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த பரிதாப சம்பவம் பற்றி பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News