செய்திகள்

மதுரையில் இருந்து சென்னை புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் கோளாறு- அவசரமாக தரையிறக்கம்

Published On 2018-03-29 11:09 IST   |   Update On 2018-03-29 11:09:00 IST
மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #spicejet #enginefailure
மதுரை:

மதுரையிலிருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் இன்று காலை சென்னை நோக்கி புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜினில் கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதனால் விமானம் உடனடியாக மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானி சரியான நேரத்தில் கோளாறை கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்தியாவில் இண்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்த விமானங்கள் தொடர்ச்சியாக என்ஜின் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #spicejet #madurai #chennai

Similar News