செய்திகள்

கடலூர் அருகே வாகனம் மோதி பெண் பலி

Published On 2018-02-07 22:47 IST   |   Update On 2018-02-07 22:47:00 IST
ரோட்டை கடக்க முயன்ற பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்த எழுத்தூர் பகுதியில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அந்த பெண் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Similar News