செய்திகள்

சிவகங்கை: சத்துணவு பணி விண்ணப்பதாரர்களுக்கு 9-ந் தேதி நேர்காணல்

Published On 2018-02-06 19:23 IST   |   Update On 2018-02-06 19:23:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு பணி விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் வருகிற 9-ந்தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய ஏதுவாக ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் வருகிற 9-ந்தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.

நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள் விண்ணப்பதாரர்களுக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் அழைப்பாணை கடிதத்துடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அழைப்பாணை கடிதம் இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அழைப்பாணை கடிதத்துடன் புகைப்படத்துடன் கூடிய கீழ்க்காணும் ஏதேனும் ஒரு ஆவணத்தை கொண்டு வரவும் அறிவுறுத்தப்படுகிறது.

ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேசன் அட்டை, வசிப்பிடமாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள இடம் குறித்த சான்றினை கட்டாயமாக எடுத்து வர வேண்டும். அழைப்பாணை கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தினை அணுகுமாறு மாவட்ட கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

Similar News