செய்திகள்
திருப்பத்தூர் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
திருப்பத்தூர் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வெங்களாபுரம் முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 24). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி நித்யா (20).
இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் ஊரை கூட்டி முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். இந்த இளம் தம்பதிக்கு ஒரு பெண் கைக் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் எழில் (21) என்பவருக்கும் நித்யாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.
கணவன் பிரபு வேலைக்கு சென்ற பிறகு, நித்யா தனது கள்ளக்காதலனை அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆத்திரமடைந்த பிரபு மனைவியை கண்டித்தார். ஆனாலும், எழிலுடன் அவர் நெருக்கமாகவே இருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைக்குழந்தையை கணவர் வீட்டிலேயே விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் நித்யா ஊரை விட்டு வெளியேறி விட்டார்.
வெளியூரில் தங்கியிருந்த அவர்கள் கூலி வேலை செய்து வந்துள்ளனர். பிறகு போன் மூலம் கணவர் மற்றும் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசிய நித்யா ஊருக்கு வந்துவிடவா? என்று கேட்டுள்ளார்.
அதற்கு, கணவர், குழந்தையை தூக்கியெறிந்து விட்டு கள்ளக்காதலனுடன் சென்ற நீ மீண்டும் ஊருக்குள் வரவே கூடாது? என்று நித்யாவை அவர்கள் கண்டிப்போடு பேசி உள்ளனர்.
இதனால் மனமுடைந்த நித்யாவும், அவருடைய கள்ளக்காதலனும் விரக்தியில் இருந்துள்ளனர். இந்த நிலையில், 2 மாத தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு கள்ளக்காதல் ஜோடி நேற்றிரவு பைக்கில் ஊருக்கு திரும்பியுள்ளனர்.
திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் ரோட்டில் உள்ள விஷ மங்கலம் என்ற பகுதியில் கள்ளக்காதல் ஜோடி இரவு 9 மணிக்கு வந்து பைக்கை நிறுத்தியுள்ளனர்.
ஊருக்குள் சென்றால் அசிங்கப்படுத்துவார்கள் என்று நினைத்து வேதனை பட்ட கள்ளக்காதல் ஜோடி பூச்சிக் கொல்லி மருந்தை வாங்கி வந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர்.
வாயில் நுரை தள்ளிய படி மயங்கி கிடந்த 2 பேரையும் அப்பகுதி வழியாக சென்ற சிலர் பார்த்து, திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து பார்த்த போது, கள்ளக்காதலன் எழில் இறந்து விட்டார். நித்யா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நித்யாவும் உயிரிழந்தார். இதுகுறித்து, தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews