செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே வேன் டிரைவரை தாக்கி கொலை மிரட்டல்: 2 வாலிபர்கள் கைது

Published On 2018-02-02 17:37 IST   |   Update On 2018-02-02 17:37:00 IST
மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது வழி விடாததால் வேன் டிரைவரை தாக்கிய 2 பேரை பேலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் இமயராஜா (வயது 52). இவர் தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

நேற்று மாலை அவர் மீன்சுருட்டி என்ற இடத்தில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு காட்டுமன்னார் கோவில் கடை வீதிக்கு வந்து கொண்டிருந்தார். அந்த வேனுக்கு பின்னால் ஆதனூரைச் சேர்ந்த ராஜகுமார் (36), ரஞ்சித் (19) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் பள்ளி வேனை முந்தி செல்ல முயன்றனர். ஆனால், வேன் டிரைவர் வழிவிடாமல் சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் வேனை மறித்து டிரைவர் இமயராஜாவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து காட்டு மன்னார்கோவில் போலீ சில் இமயராஜா புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரை தாக்கிய ராஜகுமார், ரஞ்சித் ஆகியோரை கைது செய்தார். #tamilnews

Similar News