செய்திகள்
காளையார்கோவிலில் 2½ வயது குழந்தை கடத்தல்: வாலிபர் கைது
காளையார்கோவிலில் 2½ வயது குழந்தையை கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார் குழந்தையை எதற்காக இருவரும் கடத்தினார்கள் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை:
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்தவர் கமலஜோதி (வயது28). இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பெரியநரிக்கோட்டை கிராமம் ஆகும்.
சம்பவத்தன்று கமல ஜோதி தனது 2½ வயது மகன் முக்சித்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டார். சிவகங்கை பஸ் நிலையத்தில் காளையார்கோவில் செல்வதற்காக காத்திருந்தார்.
அப்போது சிவகங்கையை சேர்ந்த ஆண்டிச்சாமி (25), அலெக்ஸ் ஆகிய 2 பேர் குழந்தையை ஊருக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வதாக கூறி கடத்தி சென்று விட்டதாக கமலஜோதி சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு ஆண்டிச்சாமியை கைது செய்தார். அலெக்சை தேடி வருகிறார்.
குழந்தையை எதற்காக இருவரும் கடத்தினார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews