செய்திகள்

திருப்பத்தூர் அருகே மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: தலைமை ஆசிரியர் கைது

Published On 2018-01-27 09:26 IST   |   Update On 2018-01-27 09:26:00 IST
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா கண்டவராயன்பட்டியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக இருப்பவர் மகாலிங்கம் (வயது 50).

இவர் அந்த பள்ளியில் படித்து வந்த 13 வயது 8-ம் வகுப்பு மாணவியை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

மேலும் இதனை வெளியில் சொன்னால் பள்ளியை விட்டு அனுப்பி விடுவேன் என மிரட்டினாராம்.

இந்த நிலையில் தலைமை ஆசிரியரின் செயல் குறித்து தனது தாயிடம் மாணவி கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர், திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் சாரதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் மகாலிங்கத்தை கைது செய்தார். #Tamilnews

Similar News