செய்திகள்
பக்கத்து வீட்டுக்காரருடன் தொடர்புபடுத்தி பேசி திட்டியதால் தீக்குளித்து பெண் தற்கொலை
ஈரோடு மாவட்டம் வெள்ளித் திருப்பர் அருகே பக்கத்து வீட்டுக்காரருடன் தொடர்புபடுத்தி பேசி திட்டியதால் மனம் உடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அம்மாபேட்டை:
அந்தியூர் தாலுகா வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள எண்ணமங்கலம், விராலிக்காட்டூரை சேர்ந்தவர் தவசி மணி. இவரது மகள் சங்கீதா (வயது 25). இவருக்கும், மேட்டூரை சேர்ந்த லட்சுமணனுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரதாப் என்ற மகன் உள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக லட்சுமணனும், சங்கீதாவும் பிரிந்தனர். சங்கீதா விராலிக்காட்டூரில் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த திருமணமான ஒருவருடன் சங்கீதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. திடீரென அந்த நபரும், சங்கீதாவும் மாயமானார்கள். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் கண்டுபிடித்தனர்.
பின்னர் போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்படி சங்கீதாவை அவரது தாயுடன் போலீசார் அனுப்பினர். அந்த நபரை அவரது மனைவியுடன் சேர்த்து வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த நபரின் மனைவி தனது அக்காள் மற்றும் அக்காள் கணவருடன் சங்கீதா வீட்டுக்கு சென்றார்.
அங்கிருந்த சங்கீதாவிடம் சென்று, தனது கணவருடன் மீண்டும் இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறாயா? என்று கேட்டு திட்டியதாக தெரிகிறது.
இதில் மனம் உடைந்த சங்கீதா கடந்த 13-ந் தேதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்தார். உடல் கருகிய நிலையில் அலறி துடித்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சங்கீதா நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வெள்ளித் திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சங்கீதாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜூம் விசாரணை நடத்தி வருகிறார்.