செய்திகள்

ஈரோட்டில் ரெயில் மோதி வாலிபர் பலி

Published On 2017-12-06 16:50 IST   |   Update On 2017-12-06 16:50:00 IST
ஈரோட்டில் ரெயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு,காசிபாளையம், கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 24).

மாதேஸ்வரனுக்கு நேற்று பிறந்த நாள். இதனால் நேற்று இரவு தனது நண்பர்களுடன் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார். இதற்காக மாதேஸ்வரன் தொட்டிபாளையம் ரெயில்நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நின்று போன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ரெயில் ஒன்று எதிர்பாராத வகையில் மாதேஸ்வரன் மீது மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் உடன் வந்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மாதேஸ்வரனை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் மாதேஸ்வரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News