செய்திகள்

நெய்வேலியில் வேன் மோதி பட்டதாரி பெண் பலி

Published On 2017-11-30 16:53 IST   |   Update On 2017-11-30 16:53:00 IST
நெய்வேலியில் தனியார் வேன் எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் பட்டதாரி பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
நெய்வேலி:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி இவரது மகள் கிருத்திகா (23). என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் நெய்வேலி புதுநகர் வேலுடையான்பட்டு திருமணம் மண்டபத்தில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

இன்று காலை திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன் கிருத்திகா மண்டபத்தில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக நெய்வேலி என்.எல்.சி. மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஊழியர்களை பணிக்கு அழைத்து செல்வதற்காக வந்த தனியார் வேன் எதிர்பாராத விதமாக கிருத்திகா மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கிருத்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News