செய்திகள்

நெய்வேலி அருகே அ.தி.மு.க. பிரமுகரை தாக்கி கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு

Published On 2017-11-28 19:16 IST   |   Update On 2017-11-28 19:16:00 IST
முன்விரோதத்தில் அ.தி.மு.க. பிரமுகரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெய்வேலி:

நெய்வேலி மந்தாரக்குப்பம் வளையமாதேவி கூட்ரோடு அருகே பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர் ராமு (வயது 40). அ.தி.மு.க. பிரமுகர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று மாலை சுப்பிர மணியன் மற்றும் சின்னச்சாமி, சசிக்குமார், செல்வம் ஆகியோர் ராமுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த ராமு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் மந்தாரக்குப்பம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

அதுபோல் சுப்பிரமணியனும் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் ராமு, கணேசன், பழனி ஆகியோர் தன்னை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News