செய்திகள்

சொத்துகளை அபகரிக்க முயன்ற தாய்-சகோதரி கைது

Published On 2017-07-22 02:12 GMT   |   Update On 2017-07-22 02:12 GMT
மகனை குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து குடும்ப சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்வதாக தாய்-சகோதரியை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:

சென்னையை அடுத்த குரோம்பேட்டை புதுகாலனியை சேர்ந்தவர் ஞானசேகரன்(வயது 37). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “போதை பழக்கம் இல்லாத தன்னை தனது தாய் விசாலாட்சி மற்றும் சகோதரி ஆர்த்தி ஆகியோர் முடிச்சூரில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து குடும்ப சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்வதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும்”கூறி இருந்தார்.

இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி குரோம்பேட்டை போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் ஞானசேகரன் கூறிய புகார் உண்மை என்பது தெரிந்தது. இதையடுத்து அவருடைய தாய் விசாலாட்சி(65), சகோதரி ஆர்த்தி(40) இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் ஞானசேகரனின் தம்பி குணசேகரன் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தது தெரிந்தது. கைதான தாய்-மகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 
Tags:    

Similar News