செய்திகள்

திருப்போரூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2017-07-19 15:22 IST   |   Update On 2017-07-19 15:22:00 IST
திருப்போரூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணம் மற்றும் 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:

திருப்போரூரை அடுத்த மடையத்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் டில்லி பாபு, விவசாயி. நேற்று இரவு அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தூங்கினார்.

நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த ரூ. 3½ லட்சம் ரொக்கம், 20 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இன்று அதிகாலை டில்லிபாபு மற்றும் அவரது குடும்பத்தினர் எழுந்த போது தான் வீட்டில் நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

டில்லிபாபு சீட்டு கட்டிய பணம் ரூ. 1½ லட்சத்தை வாங்கி வீட்டில் வைத்து இருந்தார். இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

இதேபோல் அதே பகுதி பிள்ளையார்கோவில் தெருவில் வசிக்கும் டைல்ஸ் காண்டிராக்டர் தனுசின் வீட்டுக்குள்ளும் கொள்ளை கும்பல் புகுந்தனர்.

பீரோவில் இருந்த ரூ. 20 ஆயிரம் ரொக்கம், 20 பவுன் நகையை சுருட்டி தப்பிச் சென்றுவிட்டனர். அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாமல்லபுரம் டி.எஸ்.பி. எட்வர்டு திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

Similar News