செய்திகள்
சீருடை வாங்க பணம் தராததால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை
காரைக்கால் அருகே சீருடை வாங்க தந்தை பணம் தராததால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்துள்ள பூவம் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ். கூலித் தொழிலாளி. இவரது மகன் கருணாமூர்த்தி (வயது 17). அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளிக்கு செல்ல (சீருடை) வாங்க தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியாக வேலை இல்லாமல் கஷ்டமாக உள்ளது என்று கூறி சீருடை வாங்கிக்கொடுக்க வில்லை.
இதனால் மனமுடைந்த கருணாமூர்த்தி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.