செய்திகள்

வேதாரண்யம் அருகே பக்கத்து வீட்டுக்காரரை தாக்கியவர் கைது

Published On 2017-07-03 23:00 IST   |   Update On 2017-07-03 23:00:00 IST
வேதாரண்யம் அருகே வாழைத்தார் தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த செம்போடை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 40). இவரது வீட்டு வேலி அருகே உள்ள வாழை மரம் ஒன்று தார் போட்டுள்ளது. அது சாய்ந்த நிலையில் இருந்ததை கம்பால் முட்டுக்கொடுத்து பக்கத்து வீட்டுக்காரர் நிலத்தோடு வைத்திருந்தார்.

இதைப்பார்த்த முனியப்பனின் பக்கத்து வீட்டுக்காரர் செல்வராசு வாழை மரத்தை சேதப்படுத்தும் வகையில் தன் வரப்பில் உள்ள கம்புகளை தள்ளிவிட்டாராம்.

இதை தட்டிக்கேட்ட முனியப்பன் மனைவி சவுந்தரவள்ளியை செல்வராசு தரக்குறைவாக திட்டினாராம். இதைப்பார்த்த முனியப்பன் என் மனைவியை  ஏன் திட்டுகிறாய் என்று கேட்டதற்கு ஆத்திரமடைந்த செல்வராசு முனியப்பனையும் தரக்குறைவாக பேசி மண்வெட்டி கொண்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதில் காயமடைந்த முனியப்பன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் வழக்குபதிவு செய்து செல்வராசுவை  கைது செய்தார்.

Similar News