செய்திகள்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 11 கடைகளுக்கு அபராதம்

Published On 2017-07-03 22:54 IST   |   Update On 2017-07-03 22:54:00 IST
வேதாரண்யம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 11 கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம், மருதூர் வடக்கு, கோடியக்காடு, கோடியக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார துறையினருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சுகாதார துறை இணை இயக்குனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜன், வட்டார சுகாதார துறை மேற்பார்வையாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் வேதாரண்யம், கோடியக்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள  கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது 11 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.2,800 அபராதம் விதித்து, அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.20 ஆயிரம் என கூறப்படுகிறது.

Similar News