செய்திகள்

பவானி அருகே லாரி டிரைவர் விபத்தில் பலி

Published On 2017-07-03 15:44 IST   |   Update On 2017-07-03 15:44:00 IST
பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பவானி:

பவானி அருகே குருப்ப நாயக்கன் பாளையத்தை சேர்ந்த மூர்த்தி என்பரது மகன் லோகநாதன் (வயது 23). இன்னும் திருமணம் ஆகவில்லை.

லாரி டிரைவரான லோகநாதன் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் ஒலகடம் சென்றார். பிறகு அங்கிருந்து பவானிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

பவானி அருகே உள்ள தாழமுத்து என்ற இடத்தில் வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அது நிற்காமல் சென்று விட்டது.

இதில் தலையில் பலத்த அடிப்பட்ட அவரை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.

இந்த விபத்து குறித்து பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். லோகநாதன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் தேடி வருகிறார்கள்.

Similar News