செய்திகள்

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வீட்டின் முன் விளையாடிய சிறுவன் மாயம்: கடத்தப்பட்டானா?

Published On 2017-07-02 18:58 IST   |   Update On 2017-07-02 18:58:00 IST
ஈரோடு கருங்கல்பாளையத்தில் தெருவில் விளையாடிய சிறுவன் திடீரென மாயமானான். அவனை யாராவது கடத்தி சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு, கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிர்லா (வயது36). கூலிதொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு நினிஸ்பாலு என்கிற விஷ்ணு (3) என்ற மகன் உள்ளான்.

கடந்த 30-ந் தேதி வீட்டின் முன் நினிஸ்பாலு சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென நினிஸ்பாலு மாயமாகி விட்டான்.

இதையடுத்து பிர்லா மற்றும் மகேஸ்வரியும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து பார்த்தும் சிறுவன் நினிஸ் பாலு கிடக்கவில்லை.

இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று பிர்லா கதறி அழுதபடி என் மகனை மீட்டு தாருங்கள் என புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான சிறுவனை தேடி வருகிறார்கள்.

தெருவில் விளையாடிய சிறுவன் எப்படி திடீரென மாயமானான்? அவனை யாராவது கடத்தி சென்றார் களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News