செய்திகள்

காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் புகார் பற்றி விசாரணை

Published On 2017-07-01 09:19 GMT   |   Update On 2017-07-01 09:19 GMT
புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் பற்றி விசாரிக்க டெல்லி மேலிட நிர்வாகி சின்னா ரெட்டி சென்னை வருகிறார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 72 மாவட்ட தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். ஏற்கனவே பதவியில் இருந்த இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்கள் பெரும்பாலானவர்கள் மாற்றப்பட்டனர். இதற்கு இளங்கோவன் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை திரட்டி இளங்கோவன் ஆதரவாளர்கள் டெல்லி மேலிடத்தில் புகார் செய்தனர்.

பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் தமிழக காங்கிரஸ் தலைமையின் நடவடிக்கையை கண்டித்து ஸ்ரீபெரும்புதூரில் உண்ணாவிரதமும் இருந்தனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் பற்றி விசாரிக்க டெல்லி மேலிட நிர்வாகி சின்னா ரெட்டி சென்னை வருகிறார்.

இதற்கிடையில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி இளங்கோவன் தலைமையில் இன்று காங்கிரஸ் பொருளாளர் நாசே ராமச்சந்திரன் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர்கள் ஏ.ஜி.சிதம்பரம், பஞ்சாட்சரம், முன்னாள் மாவட்ட தலைவர்கள் வி.ஆர்.சிவராமன், சக்கர பாணி ரெட்டியார், திருச்சி ஜெரோம், குலாம், பால முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது காமராஜர் பிறந்த நாள் விழாவை 15-ந்தேதி திருச்சியில் பிரமாண்டமாக கொண்டாடவும், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் ஆலோசித்தனர்.
Tags:    

Similar News