ஈரோடு மாவட்டத்தில் இன்று கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
ஈரோடு:
ஏசு கிறிஸ்து இறை பணியை தொடங்குவதற்கு முன்பு 40நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டு உள்ளது .
இதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் கடந்த 1-ந்தேதி முதல் 40 நாட்கள் தவக்காலத்தை தொடங்கி உள்ளார்கள். இந்த தவக்காலம் நிகழ்ச்சி வருகிற (ஞாயிற்றுக்கிழமை) 16-ந்தேதி முடிவடைகிறது.
இந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கிறார்ள்.
இதையொட்டி இன்று காலை ஈரோடு மாவட்டத் தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது .
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கையில் குருத்தோலைகளுடன் கிறிஸ்தவ பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலங்களிலும் இன்று காலை விசேஷ பிரார்த்தனை நடந்தது .
ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் அருகே உள்ள சி.எஸ். ஐ. கிறிஸ்தவ ஆலயம், ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள அமன அன்னை கிறிஸ்தவ ஆலயம், ரெயில்வே காலனியில் உள்ள இருதய ஆண்டவர் கிறிஸ்தவர் ஆலயம் மற்றும் திருநகர் காலனி, பொய அக்ரகாரம், சூளை உள்படபல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் மற்றும் கோபி,சத்தியமங்கலம், பெருந்துறை,அந்தியூர், பவானி, கவுந்தப்பாடி, பு.புளியம்பட்டி, ஆப்பக் கூடல், கொடுமுடி, அரச்சலூர், மொடக்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று காலை குருத்தோலை ஞாயிறு ஊர்வலம், சிறப்பு ஆராதனைகள் நடந்தது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.