செய்திகள்

மயிலாடுதுறையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ. நிதி உதவி

Published On 2017-03-19 21:35 IST   |   Update On 2017-03-19 21:35:00 IST
மயிலாடுதுறையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ. வி. ராதாகிருஷ்ணன் நேரில் சென்று நிதிஉதவி வழங்கினார்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் கூறைநாடு அண்ணாவீதியில் வசிக்கும் சலவை தொழிலாளர்கள் பாலமுருகன், குணசேகரன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

இது குறித்து தகவல்அறிந்த வீ.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிஉதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

அவருடன் அ.தி.மு.க. நகர செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், நகர துணை செயலாளர் நாஞ்சில் கார்த்திக், வார்டு செயலாளர் சரவணன், ஒன்றிய நிர்வாகிகள் செல்வநாயகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் ஆகியோரும் சென்றனர்.

Similar News