செய்திகள்
வேதாரண்யம் அருகே மளிகைக் கடையில் ரூ.40 ஆயிரம் திருட்டு
வேதாரண்யம் அருகே மளிகைக் கடையில் ரூ.40 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த நாலுவேதபதி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் (வயது 65). இவர் செம்போடை வடக்கு கடைத்தெரு பகுதியில் புஷ்பவனம் செல்லும் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 16-ந் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறந்து பார்த்த போது கடையின் மேற்கூரையை மர்ம நபர்கள் பிரித்து உள்ளே இறங்கி ரூ. 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் சிகரெட் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து முருகையன் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.