செய்திகள்
சத்தியமங்கலம் அருகே மூதாட்டியிடம் 7 பவுன் செயின் பறிப்பு
சத்தியமங்கலம் அருகே மூதாட்டியிடம் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டமுத்தூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 80).
சம்பவத்தன்று பழனியம்மாள் தனதுவீட்டு திண்ணையில் உட்கார்ந்துஇருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
அவர்கள் தனியாக உட்கார்ந்து இருந்த பழனியம்மாளிடம் விலாசம் கேட்பதுபோல நடித்தனர். அப்போது அவர்கள் திடீர் என்று பழனியம்மாளின் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு ஓடினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் திருடன் திருடன் பிடியுங்கள் என்று சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய 2 பேரை விரட்டினர். ஆனால் அதற்குள் அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.