செய்திகள்
மயிலாடுதுறையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி மயிலாடுதுறையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை:
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ரெயில்வே தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளை பறிக்க கூடாது, சி.ஆர்.சி பதவி உயர்வை காலதாமதப் படுத்தாமல் உடன் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் மயிலாடுதுறை ஜங்ஷனில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். கிளை செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். கோட்ட தலைவர் மணிவண்ணன், பொறுப்பாளர்கள் செல்வம், ரகு, வீரமணி, சாகுல்ஹமீது, பிரகாஷ் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
முடிவில் திருவாரூர் கிளை செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.