செய்திகள்

சென்னிமலை யூனியன் அலுவலகம் முன் காலி குடங்களுடன் வந்து பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-03-16 16:35 IST   |   Update On 2017-03-16 16:35:00 IST
முங்கத்தொழுவு கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட மக்கள் குடிநீர் கேட்டு சென்னிமலை யூனியன் அலுவலம் முன்பு காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஈரோடு:

முங்கத்தொழுவு கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட மக்கள் குடிநீர் கேட்டு சென்னிமலை யூனியன் அலுவலம் முன்பு காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சென்னிமலை ஒன்றியம், முருங்கத்தொழுவு கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட மங்களபுரம், சல்லிமேடு, அம்மன்கோவில் புதூர் ஆகிய பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டகுடும்பத்தினர் ஒரு மாத காலமாக குடிநீர் இன்றி சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம் இதனால் 50-க்கும்மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சென்னிமலை யூனியன்அலுவலகம் வந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். குடிநீர் கேட்டும் அதிகாரிகளை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News