செய்திகள்
வேதாரண்யத்தில் விஷ வண்டு கடித்து 6 பேர் காயம்
வேதாரண்யத்தில் விஷ வண்டு கடித்ததில் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட சிறைமீட்டான்காடு பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மை என்பவர் இறந்ததையொட்டி நேற்று மதியம் இறுதி சடங்கு நடைபெற்றது. அப்போது வெடி வெடித்ததில் பனைமரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு என்றழைக்கப்படும் விஷ வண்டுகள் வெளியேறி கூட்டத்தினரை கடித்தது.
இதில் வேதையன், தொழிலாளி அன்பழகன், கார்த்தி, மூர்த்தி, மனோகரன், பாஸ்கரன் உட்பட பலரை கடித்தது. இதில் ஆறு பேர் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.