செய்திகள்

நெடுவாசல் போராட்டம்: தீபாவின் கணவர் நேரில் ஆதரவு

Published On 2017-03-07 18:36 IST   |   Update On 2017-03-07 18:36:00 IST
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று தீபாவின் கணவர் மாதவன் போராட்டத்தில் பங்கேற்று நேரில் ஆதரவு தெரிவித்தார்.
நெடுவாசல் போராட்டத்தில் இன்று தீபாவின் கணவர் மாதவன் பங்கேற்று ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த போராட்டம் 20 நாட்களாக வெற்றியுடன் நடைபெற்று வருகிறது. இதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஜனநாயக நாட்டில் மக்களுக்கு விருப்பம் இல்லாத எதையும் செய்யக்கூடாது. ஒரு நிர்வாகத்தின் லாபத்திற்காக ஒரு கிராமத்தை வதைப்பது கண்டிக்கத்தக்கது.

இங்கு நான் அரசியல் பற்றி பேச வரவில்லை. 100 சதவீதம் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். இந்த போராட்டத்தை கைவிடக்கூடாது. நானும் உங்களுடன் இருந்து போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News