செய்திகள்
ஹைட்ரோ கார்பன் திட்டம்: பொன்.ராதாகிருஷ்ணனுடன் போராட்டக்குழுவினர் இன்று சந்திப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்திக்க நெடுவாசல் போராட்டக்குழுவினர் மதுரை புறப்பட்டு சென்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நேற்று போராட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அவர் பேசும் போது, நான் தனிமனிதனாக முடிவெடுத்து இங்கு வரவில்லை. மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய பா.ஜ.க.வின் நிர்வாகியாக தான் வந்துள்ளேன். இந்த திட்டம், தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு. இதைத்தான் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியும் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எந்த அரசியல்வாதிகளுக்குமே தெரியாது. அது தெரிந்திருந்தால் முன்பே இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுத்திருக்க மாட்டார்கள். ஆகையால், மீண்டும் ஆய்வு செய்து, மக்களிடம் கருத்து கேட்கப்படும். அப்போது, மக்கள் ஏற்கவில்லை என்றால் இந்த திட்டம் ரத்து செய்யப்படும்.
ஏதோ அரசியல் கட்சிகள் கூறுவதால் போராட வேண்டாம் என்றும், அறிவியல்பூர்வமாக பாதிப்பு இருக்கிறதா? என்பதை சிந்தித்துப் பார்த்து தெளிவுபடுத்தி உறுதியாக இந்த திட்டம் வேண்டாம் என்று சொன்னால் கைவிட்டு விடுகிறோம் என்றும் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி கூறி இருக்கிறார்.
இதுகுறித்து பேச போராட்டக்குழுவினர் இன்று (சனிக்கிழமை) மதுரையில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனையும், பா.ஜ.க. தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்படி நல்லாண்டார் கொல்லை, வாணக்கன்காடு, வடகாடு, கருக்காகுறிச்சி, புள்ளான் விடுதி, நெடுவாசல், கோட்டைக்காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் 30 பேர் இன்று மதுரை வந்துள்ள மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரை சந்திப்பதற்காக 7 கார்களில் புறப்பட்டு சென்றனர்.
அப்போது போராட்டக் குழுவினர் நிருபர்களிடம் கூறும் போது, பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், இந்த போராட்டம் தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம், இயற்கை எரிவாயு எடுக்கும் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். எரிவாயு எடுக்க எண்ணெய் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அபாயகரமாக உள்ள ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பாக மூட வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசு பொது மக்களுக்கு நம்பகத் தன்மையை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிடும் வரை எங்களது போராட்டம் தொடரும். ஆலங்குடியில் இன்று கலெக்டருடன் பேச்சு வார்த்தை நடைபெறுவதாக இருந்தது. மத்திய மந்திரியுடனான சந்திப்பில் எடுக்கும் முடிவின் படி கலெக்டரை சந்திப்பதா, வேண்டாமா? என்பது பற்றி முடிவு செய்வோம். போராட்டத்தை வாபஸ் பெற்ற கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த பொது மக்களும் மத்திய மந்திரியை சந்திக்க வந்துள்ளனர். அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம் என்றனர்.
நேற்று நெடுவாசல் போராட்டக் குழுவினருடன் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். ஆனால் போராட்டக்குழுவினர் யாரும் செல்லவில்லை. இந்நிலையில் இன்றும் கலெக்டருடனான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.