செய்திகள்

பெங்களூர் சிறையில் தீர்ப்பு நகல் வழங்கியதும் சசிகலா சரண் அடைகிறார்

Published On 2017-02-14 06:44 GMT   |   Update On 2017-02-14 06:44 GMT
பெங்களூர் சிறையில் தீர்ப்பு நகல் வழங்கியதும் சசிகலா உள்ளிட்ட மூவரும் சரண் அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


சொத்து குவிப்பு வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் உடனே சரண் அடைய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தற்போது சசிகலா கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ.க்களுடன் தங்கி உள்ளார். விடுதியை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தீர்ப்பை கேட்டதும் சசிகலா அதிர்ச்சி அடைந்தார். அவர் சரண் அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நகல் பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்பிறகு ஜெயிலில் இருந்து சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் சம்மன் அனுப்பப்படும்.

இதேபோல் சுப்ரீம் கோர்ட்டு நகலும் சசிகலாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இன்று பிற்பகலில் தீர்ப்பு நகல்கள் வழங்கும் நடைமுறை தொடங்கும். ஓரிரு நாளில் அவர்கள் சரண் அடைகிறார்கள். 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தீர்ப்பினால் சசிகலா மனச்சோர்வு அடைந்துள்ளார்.

Similar News