செய்திகள்

திருவட்டார், குலசேகரத்தில் பள்ளி மாணவன்-பெண் மாயம்

Published On 2017-01-28 21:28 IST   |   Update On 2017-01-28 21:28:00 IST
திருவட்டார் , குலசேகரத்தில் பள்ளி மாணவன் மற்றும் பெண் மாயமானது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

திருவட்டார் நெடும்பாறை காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவரது மகன் ரதீஷ் (16). இவர் காட்டாத்துறையில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் பள்ளி முடிந்து நீண்டநேரம் ஆகியும் ரதீஷ் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மாணவனை தேடி பள்ளிக்கு சென்றனர். ரதீஷ் அங்கு இல்லை.

இதையடுத்து உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவன் ரதீசை தேடி வருகின்றனர்.

குலசேகரம் மடத்தூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 47). இவரது மனைவி மேரிஸ்டெல்லா (45). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. ரவிச்சந்திரன் வெளிநாட்டில் வேலைப் பார்த்துவந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார்.

அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மேரிஸ்டெல்லா வீட்டில் இருந்து உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர்  வீடு திரும்பவில்லை.

இதையடுத்து ரவிச்சந்திரன், ஸ்டெல்லாவை தேடி உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் இல்லை. இதையடுத்து தோழிகளின் வீடுகளில் தேடினார். அங்கும் அவர் இல்லை.

இதுகுறித்து குலசேகரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மேரிஸ்டெல்லாவை தேடி வருகின்றனர்.

Similar News