செய்திகள்
விபத்துக்குள்ளான அரசு பஸ்சின் டயர்கள் கழன்று கிடப்பதை காணலாம்.

மதுரை சிந்தாமணியில் அரசு பஸ் விபத்து: டிரைவர் பலி

Published On 2017-01-26 15:18 IST   |   Update On 2017-01-26 15:18:00 IST
அரசு பஸ் இன்று காலை திடீர் விபத்தில் சிக்கியது. இதில் டிரைவர் சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.
அவனியாபுரம்:

மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் இன்று காலை ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. நாகர்கோவிலில் இருந்து வந்த இந்த பஸ்சை, கன்னியாகுமரியைச் சேர்ந்த டிரைவர் சுரேஷ்(வயது 44) ஓட்டி வந்தார்.

கண்டக்டராக கன்னியாகுமரி சிவக்குமார் பணியாற்றினார். பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

டோல்கேட் பகுதியை பஸ்கடந்தபோது, எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்பக்கம் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சின் பின் சக்கரங்கள், அப்படியே கழன்று ஆக்சிலோடு பிரிந்தது. இதனால் பஸ் பயணிகள் அலறினர்.

விபத்தின் போது டிரைவர் சுரேஷ், பஸ்சில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar News