செய்திகள்
பெண்ணாடத்தில் தீ விபத்து: மரக்கடை- வீடு எரிந்து சாம்பல்
பெண்ணாடத்தில் மரக்கடையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேற்கு வால்பட்டறை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 45). இவர் பெண்ணாடம் முருகன் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே மரக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு 8 மணிக்கு கடையை பூட்டிவிட்டு சென்றார்.
நள்ளிரவு 3 மணியளவில் மரக்கடையில் திடீரென்று தீ பிடித்தது. சிறிது நேரத்தில் அந்த தீ கடை முழுவதும் பரவியது. இதில் அங்கிருந்த மேஜை, பீரோ, கட்டில் மற்றும் மரப்பொருட்கள் எரிந்து சாம்பலாகின. மேலும் கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் எரிந்து சேதமானது.
மரக்கடையில் எரிந்த தீ அருகில் உள்ள கபிலன் என்பவர் வீட்டுக்கும் பரவியது. அவர் வீட்டில் உள்ள சமையல் அறை தீ பற்றி எரிந்தது. உடனே கபிலன் அவரது மனைவி மற்றும் மகன் வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்தனர்.
தீ விபத்தில் சமையல் அறையிலிருந்த பிரிட்ஜ், கிரைண்டர் மற்றும் கபிலனின் மகன் வைத்திருந்த ரூ.2 ஆயிரமும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து திட்டக்குடி தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சந்திரன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் மரக்கடை மற்றும் வீட்டில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.