செய்திகள்

ராமநாதபுரம் அருகே வங்கிக்கு பணம் எடுக்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து பலி

Published On 2016-12-21 15:09 IST   |   Update On 2016-12-21 15:09:00 IST
ராமநாதபுரம் அருகே வங்கிக்கு பணம் எடுக்க வந்த முதியவர், மயங்கி விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள கீழக்கரையில் ஸ்டேட் வங்கி உள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.இன்று காலையில் வங்கி திறந்ததும் 100க்கும் மேற்பட்டோர் பணம் எடுக்க வங்கிக்கு வந்தனர். அவர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். கீழக்கரை வடக்கு தெருவைச் சேர்ந்த சித்திக் (வயது 65) என்பவரும் பணம் எடுக்க வரிசையில் நின்றார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். தலையில் அடிபட்ட அவர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

வங்கிக்கு பணம் எடுக்க வந்த முதியவர், மயங்கி விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News