செய்திகள்
கடலூரில் பாம்பு கடித்து 4 வயது சிறுவன் பலி
கடலூரில் பாம்பு கடித்து 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கடலூர்:
கடலூர் அன்னவள்ளி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சாதவன் (வயது 4). கடந்த 1-ந்தேதி சாதவன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தான். அவனது பெற்றோர் வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது ஜன்னல் வழியாக விஷ பாம்பு வீட்டிற்குள் புகுந்தது. அது தூங்கி கொண்டிருந்த சாதவனை கடித்தது. வாயில் நுரைதள்ளி, அழுது கொண்டிருந்த சாதவனை மீட்டு அவனது பெற்றோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சாதவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் சாதவன் பரிதாபமாக நேற்றிரவு இறந்தான். அவனது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.