செய்திகள்

தோவாளை மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை திடீர் உயர்வு

Published On 2016-11-26 11:20 GMT   |   Update On 2016-11-26 11:20 GMT
தோவாளை மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை திடீரென உயர்வால் ஒரு கிலோ ரூ.1400 விற்பனை செய்யப்பட்டது.

ஆரல்வாய்மொழி:

குமரி மாவட்டம் தோவாளையில் புகழ் பெற்ற மலர் சந்தை உள்ளது. இங்கு நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும்.

கடந்த சில வாரங்களாகவே தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்தே காணப்பட்டது. வழக்கமாக சபரிமலை சீசன் தொடங்கும்போது பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு பெரிய அளவில் பூக்கள் விலை உயரவில்லை. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து இருந்தனர்.

இந்த நிலையில் இன்று பூக்கள் விலை திடீரென உயர்ந்தது. நேற்று ஒரு கிலோ ரூ.450-க்கு விற்ற மல்லிகைப் பூ இன்று ரூ.950 உயர்ந்து ரூ.1400-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று பிச்சிப்பூ கிலோ ரூ.500-க்கு விற்பனை ஆனது. இன்று பிச்சிப்பூ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து இருந்தது. அதன் விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் பழைய விலை):-

சம்பங்கி ரூ.100 (20), மஞ்சகேந்தி ரூ.40 (30), அரளி -ரூ.90 (80), ரோஸ் ரூ.90 (80), சிவப்பு கேந்தி ரூ.50 (40), வாடாமல்லி ரூ.20 (15), செவ்வந்தி ரூ.70 (60).

நாளை முகூர்த்த தினம் என்பதாலும், பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைவாலும் பூக்கள் விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News