செய்திகள்

கூட்டுறவு வங்கிகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும்: காஞ்சீபுரம் கலெக்டரிடம் காங்கிரசார் கோரிக்கை

Published On 2016-11-16 17:35 IST   |   Update On 2016-11-16 17:35:00 IST
500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கூட்டுறவு வங்கிகள் மூலம் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்று காஞ்சீபுர மாவட்ட கலெக்டரிடம் காங்கிரசார் கோரிக்கை வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராமன், தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி காஞ்சி நகர தலைவர் ஆர்.வி.குப்பன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ஏடிஎம் வங்கி வாசல்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.

பணத்தட்டுப்பாடு காரணமாக ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிப்பில் இருந்து மக்களை மீட்க மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளை பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்வதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள வங்கிகளின் மண்டல உயர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு பணப் பரிமாற்றம் எளிய மற்றும் சுமூகமான முறையில் நடைபெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Similar News