வேதாரண்யம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட குப்பையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சப்பன். இவரது மகன் வீரையன் (26). இவர் 2010ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த வேதநாயகி என்ற பெண்ணை கொலை செய்த வழக்கு, பல்வேறு வழிபறி மற்றும் திருட்டு வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்தார்.
தொடர்ந்து இவர் 4.10.16 அன்று தேத்தாகுடி பகுதியில் ஒரு கடையில் தகராறு செய்து கடைக்காரரிடமிருந்து 500 ரூபாய் பறித்த வழக்கில் சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை பரிந்துரையின் பேரில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி, வீரையனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன் பேரில் வேதாரண்யம் போலீசார் நாகை கிளை சிறைச்சாலையில் இருந்த வீரையனை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்து, அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.