செய்திகள்
வேலி தகராறில் விவசாயி மீது தாக்குதல்: கணவன், மனைவி கைது
வேதாரண்யம் அருகே வேலி தகராறில் விவசாயி மீது தாக்குதல் நடத்திய கணவன், மனைவியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம், தென்னம்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது36). விவசாயி.
இவர் சம்பவத்தன்று தன் நிலத்தின் வேலியை அடைத்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (50), அவரது மனைவி சுசீலா (44) ஆகிய இருவரும் சென்று மாரிமுத்துவை அவதூறாக பேசி தாக்கி உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாரிமுத்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வம், சுசீலா ஆகிய இருவரையும் கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தார்.