செய்திகள்

காவிரி நீர் வராததால் வீராணம் ஏரி வறண்டது

Published On 2016-11-10 12:35 IST   |   Update On 2016-11-10 12:36:00 IST
காவிரியில் இருந்து தண்ணீர் வராததால் வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 147.5 அடி ஆகும். ஏரியின் நீர் மூலம் 48 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமாக வீராணம் ஏரி இருக்கிறது.

பருவமழை சரிவர பெய்யாததாலும், காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததாலும் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 310 கன அடியாக குறைந்துவிட்டது. இதனால் ஏரி வறண்டு காணப்படுகிறது.

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. ஏரி வறண்டுள்ளதால் குடிநீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Similar News