செய்திகள்

பல்லாவரத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2016-10-21 14:21 IST   |   Update On 2016-10-21 14:21:00 IST
பல்லாவரத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம்:

பழைய பல்லாவரம் வெங்கட்ராமன் நகர், கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் மணிகண்டன் (வயது 8) அருகில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த அவன் நண்பர்களுடன் அருகில் உள்ள ராஜாமலை கல்குவாரி குட்டையில் குளித்தான்.

ஆழமான பகுதிக்கு சென்ற மணிகண்டன் தண்ணீரில் மூழ்கி பலியானான். அவனது உடலை தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Similar News