செய்திகள்

கேளம்பாக்கம் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

Published On 2016-10-20 15:00 IST   |   Update On 2016-10-20 15:00:00 IST
கேளம்பாக்கம் அருகே 6-வது மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
திருப்போரூர்:

கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் இளவரசன். சாப்ட்வேர் இன்ஜினினீயர்.

இவரது மனைவி சத்திய மீனா. இவர் இன்று காலை 6-வது மாடியில் துவைத்த துணிகளை காய போட முற்பட்டபோது எதிர் பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து இளவரசன். கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Similar News