செய்திகள்
ஆதம்பாக்கத்தில் ஆட்டோ டிரைவர் கொலையில் மேலும் 4 பேர் கைது
ஆதம்பாக்கத்தில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மேலும் 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
கிண்டி மசூதி காலனியை சேர்ந்தவர் அசாருதீன். ஆட்டோ டிரைவர்.
கடந்த 16-ந்தேதி இரவு ஆதம்பாக்கத்தில் சிட்டி லிங்க் ரோட்டில் பஸ்நிறுத்தம் அருகே அசாருதீனை மர்ம கும்பல் ஓடஓட விரட்டி வெட்டி கொன்று விட்டு தப்பியது.
கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
விசாரணையில் கடந்த 2014-ம் ஆண்டு கிண்டியில் அருள்நிதி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு அசாருதீன் மீது உள்ளது. அதற்கு பழிக்கு பழி வாங்க அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
அருள்நிதியின் நண்பரான கிண்டி மடுவங்கரையை சேர்ந்த ஜெய்குமார் தனது நண்பர்களுடன் கொலை சதியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து ஜெய்துரை, தர்மதுரை, அரிகரன் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த நிலையில் இக்கொலை தொடர்பாக ஆதம்பாக்கத்தை சேர்ந்த நாகூர்மீரான், டெம்போ மணிகண்டன், குட்டி, பிரசன்னகுமார் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.