செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்: 94 பேர் கைது

Published On 2016-09-19 17:01 GMT   |   Update On 2016-09-19 17:01 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 94 பேரை போலீசார் கைது செய்தனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பெரிய வெண்மணி ஊராட்சியில் 100 நாட்களுக்கு மண் வெட்டும் திட்டத்தை அமல்படுத்த கோரியும், வங்கி மூலம் வழங்கப்படும் சம்பளத்தை வங்கியில் அவரவர்களே எடுத்துக்கொள்ள ஆவண செய்ய வேண்டும் எனவும், வேலை செய்யும் அனைத்து நாட்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் எனவும், பணியின் போது விபத்து ஏற்படும் தொழிலாளிக்கு இலவச மருத்துவம் செய்ய வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரிய வெண்மணி, சின்னவெண்மணி, கொத்தவாசலை சேர்ந்த கிராம மக்கள் சுமார் 100–க்கும் மேற்பட்பட்டோர் திட்டக்குடி, அரியலூர் ரோட்டில் வெண்மணி பிரிவு பாதையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 73 பெண்கள் உள்பட 94 பேரை உதவி போலீஸ் சூப்பிரண்டு குமரவேல், குன்னம் போலீஸ் இன்ஸ்–பெக்டர் அன்புசெல்வன் ஆகியோர் கைது செய்தனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, முதல்–அமைச்சர் ஜெயலலிதா, காந்தி, அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஷ், பாரதியார் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை கையில் வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News